ஞாயிறு, 16 மே, 2010

ஆபீசில் தூங்குவது எப்படி

(இது என்னோட முதல் பதிவுங்க.. தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க)

நானும் என் நண்பர்கள் மற்றும் சக பதிவாளர்களிடம் பலமுறை கேட்டு பார்த்துவிட்டேன் யாரும் உருப்படியான இல்ல உபயோகமான தகவலை சொல்லவில்லை. அவனவன் நிப்பாட்டுவது எப்படின்னு சொல்றானே தவிர மத்தவங்ககிட்டேயிருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு சொல்லவே இல்லை. அதனால்தான் என் சொந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

ஆபீசுல தூக்கத்தை நிப்பாட்டுவது தான் இருக்குற வேலையிலேயே ரொம்ப கஷ்டம். ஆனா தூங்குவதற்கு நாம் காரணம் இல்லைன்னு ரொம்ப பேருக்கு நல்லாவே தெரியும். சில மேனேஜருங்க அவங்களுக்கு பொழுது போகலைன்னாவோ இல்லை அவங்களோட வேலையை காப்பாத்திக்கவோ, இல்லை கம்பெனி ஓனருக்கு பிலிம் காட்டவோ ஒரு மீட்டிங் வப்பாங்க. அந்த மீட்டிங்குல எவனும் பேச மாட்டான், மேனேஜரு பேசுறதையும் நிறுத்தமாட்டான். இந்த ஆளுங்க தான் நம்ம தூக்கத்துக்கு காரணம்.

என்ன மாதிரி தினம் ஒரு ஹாரர் படம் பார்த்துவிட்டு இரவு ஒன்றை மணிக்கி தூங்கி ஏழரை மணிக்கி எழுந்திரிச்சி எட்டரை மணிக்கு ஆபீசுக்கு போனால் ஒன்பதரை மணி வரைக்கும் தூக்கம் நிக்காது.

சரி, யாருக்கும் தெரியாமல் தூங்குவது எப்படி ?

1. லாப்டாப்பையோ இல்லை ஒரு செட் பில்லையோ டேபிளில் வைத்துக்கொண்டு உன்னிப்பாக கணக்கு பார்ப்பதை போல ஒரு கால்குலேரை தட்டி கொள்ளவும். யாரவது கூப்பிட்டால் உடனே திரும்பி பார்க்காமல் (உடனே திரும்பினா கண்ண பார்த்து கண்டு பிடிச்சுடுவாங்க)ஸ்லோ மோஷணுல பார்க்கவும். இல்லை பார்க்காம பதில் சொல்வது மட்டும் உசிதம்.

2. இப்போ உங்க பாஸுக்கு முன்னாடி உட்கார்ந்து இருக்கீங்க அவரு என்னமோ பார்த்து படுச்சிகிட்டு இருக்காருன்னு வச்சுகிங்க. நீங்களும் உங்களோட நோட்புக்குல உன்னிப்பா எழுதுற மாதிரியோ, இல்லை படிக்கிற மாதிரியோ (வாய் முனுமுனுத்தா போதும்) சீரியசா தலையை குனிந்து கொண்டு தொடரவும்.

3. ஒரு பேப்பரையோ இல்லை குண்டூசி டப்பாவையோ கீழே தள்ளிவிட்டு ஒன்னு ஒண்ணா பொறுக்கிக்கொண்டேயோ இல்லை கம்ப்யுட்டரில் பவர் சப்ளை சரி செய்வது போலவோ குனிந்து கொண்டும் தூங்கலாம் (அதிக பட்சம் ஒரு நிமிடம் தான்).

4. தலையை சொரிந்து கொண்டே (கண்ண மறைக்கனுமில) செல்போனையோ இல்லை ரிசீவரையோ இடது புற காதில வச்சுக்கிட்டு தூங்குறது ஒரு விதம்.

5. முக்கியமான பைலையோ இல்லை புக்கையோ தேடுற மாதிரி நின்னுகிட்டு தூங்குறதும் ஒரு விதம்.

இன்னும் பல விதங்களை கண்டு பிடிப்போம்.

குறிப்பு: இந்த ஐடியா குறட்டை விடாமல் தூங்குபவர்களுக்கு மட்டும் தான்.
(குறட்டை விடுபவர்களுக்கு ஐடியா என்னவென்பதை என் எதிரில் உட்கார்ந்து இருக்கும் சவுதிக்காரனை கேட்டு தெரிந்து கொண்டு சொல்கிறேன்)

நானும் எத்தனைமுறையோ பார்த்துட்டேன் இந்த மனேஜருகளோ இல்லை பெண்களோ தூங்கினா ஒரு பய கண்டுக்க மாட்டேன்கிறான். ஆனா நம்ம தூக்கத்தை மட்டும் டிஸ்ட்ரப் பண்ண வந்துடுரானுவோ.

இப்போ பிளாக் எழுத ஆரம்பிச்சாச்சு இனிமே எனக்கு தூக்கம் வருமாங்குறது சந்தேகம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக